மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது : ரஜினிகாந்த் இரங்கல்..!

தேனி மாவட்டம் பசுமலையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆரம்பக்காலத்தில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த அவர், பின்னர் இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அவர், வாலி, உதயா, பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘எதிர்நீச்சல்’தொலைக்காட்சி தொடர் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற மாரிமுத்து, இன்று காலை மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு திரைக்கலைஞர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில் , மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி. என்று குறிப்பிட்டுள்ளார்.
மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.
— Rajinikanth (@rajinikanth) September 8, 2023
அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.