1. Home
  2. தமிழ்நாடு

பிரபல மராத்தி நடிகர் மேடையில் நடித்துக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து மரணம்..!

1

தனது நடிப்புத் திறமையால் மராத்தி திரைப்படங்களில் முத்திரை பதித்த சதீஷ் ஜோஷி, மராத்தி மொழி சீரியல்களின் மூலமாக மகாராஷ்டிர குடும்பங்களில் பிரபலமானார். ஜீ மராத்தி சேனலில் ஒளிபரப்பான ’பாக்யலட்சுமி’ சீரியலில் தனது கதாபாத்திரத்திற்காக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் சதீஷ் ஜோஷி. சாகித்ய சங்கத்தின் மச்சகடிகா நாடகத்திலும் நடிகர் சதீஷ் ஜோஷி பணியாற்றியுள்ளார்.வீரேந்திர பிரதான் இயக்கிய பெரும்பாலான சீரியல்களில் இவர் நடித்துள்ளார் 

நேற்று மாலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சதீஷ் ஜோஷி, மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.அவரது திடீர் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே காலமானாது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


 

Trending News

Latest News

You May Like