1. Home
  2. தமிழ்நாடு

THUG LIFE படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..!

1

கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்குகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியானது. அதன்படி தக் லைஃப் என்ற டைட்டிலில் இந்தப் படம் உருவாகிறது. கமலுடன் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்க, AR ரஹ்மான் இசையமைக்கிறார்.இதில், ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கேரக்டரில் கமல் நடிக்கவுள்ளார். இந்த பெயர் தேவர் மகன் சக்திவேலையும் நாயகன் பட வேலு நாயக்கரையும் நினைவுப்படுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

தக் லைஃப் டைட்டில் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, படம் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.இந்நிலையில், தக் லைஃப் டைட்டில் குறித்து ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறனும் தனது பங்கிற்கு தக் லைஃப் டைட்டிலை கலாய்த்துள்ளார்.அதாவது, "விக்ரம் படத்தை ஹிட்டாக்குனதால நல்ல படங்கள்ல நடிச்ச இவரும் இப்ப கத்தி, துப்பாக்கி, போதைப் பொருள், ஆத்தா, அம்மான்னு கெளம்பிட்டாரு. தேவர் மகன்ல அருவாளை கீழ போட்டுட்டு படிக்க போங்கடான்னு சொன்னவரு, இப்ப சாக்குமூட்டையை தலைல சுத்திக்கிட்டு கேங்க்ஸ்டர் ஆகிட்டாரு டோய்." என கலாய்த்துள்ளார். இன்னொரு பதிவில், "ஓ... ஜாதி வேற இருக்கா? ரைட்டு.." என ஒரே வரியில் போட்டுத் தாக்கியுள்ளார்.


 


 


 

Trending News

Latest News

You May Like