மனுஷன்யா இவரு…! வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு பண உதவி செய்த விஜய்சேதுபதி!

மறைந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய்சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் (45) நேற்று மரணம் அடைந்தார். அவரின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.அவரது திடீர் மறைவால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.எஸ். நகரில் உள்ள வீட்டில், வடிவேல் பாலாஜியின் உடலுக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று காலை வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த விஜய் சேதுபதி நிதியுதவியும் அளித்தார்.
newstm.in