“மனு ஸ்மிருதியை தடை செய்ய வேண்டும்” : வலுக்கும் போராட்டம்!

பெண்களை இழிவுப்படுத்தும் மனு ஸ்மிருதியை தடை செய்யக்கோரி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது.
மனுஸ்மிருதி நூலைத் தடை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டார்.
பிற்படுத்தப்பட்ட மக்களையும், பழங்குடிகளையும், பெண்களையும் இழிவுபடுத்துவதும் மனுஸ்மிருதி நூலைத் தடை செய்ய வேண்டும் என மைய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் ஆட்சியர் அலுவலகம், அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுபோல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மனு ஸ்மிருதியை தடை செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
newstm.in