1. Home
  2. தமிழ்நாடு

குபேரனை போல் செல்வ செழிப்பு பெற சொல்ல வேண்டிய மந்திரம்..!

1

திங்கட்கிழமைகளில் 108 போற்றி துதிகளை சொல்லி, வில்வத்தால் அர்ச்சனை செய்தால் குபேரனை போல் நமக்கும் குறைவில்லாத செல்வ வளங்களை அள்ளிக் கொடுப்பார் என்பது நம்பிக்கை. சிவ பெருமானுக்கு விருப்பமான வில்வத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் ஐஸ்வர்ய சிவனுக்கு 108 போற்றி துதிகள் சொல்லி, வில்வத்தால் அர்ச்சனை செய்யும் போது மகாலட்சுமியும், சிவ பெருமானுக்கு மனம் மகிழ்ந்து நமக்கு அளவில்லாத செல்வங்களை அள்ளிக் கொடுப்பார்கள் என சொல்லப்படுகிறது.

ஐஸ்வர்ய சிவன் 108 போற்றி :


01. ஓம் அம்மையே அப்பா போற்றி
02. ஓம் அளப்பிலா அருளே போற்றி
03. ஓம் அன்பெனும் மலையே போற்றி
04. ஓம் அடியார்கள் துணையே போற்றி
05. ஓம் அணுவினுள் அணுவே போற்றி
06. ஓம் அண்டங்கள் கடந்தாய் போற்றி
07. ஓம் அகரமே அறிவே போற்றி
08. ஓம் அறிந்திடு மொழியே போற்றி
09. ஓம் அகத்தனே போற்றி போற்றி
10. ஓம் அலைகடல் விரிவே போற்றி

11. ஓம் அழகனாம் அமுதே போற்றி
12. ஓம் அரும்பிறை அணிந்தாய் போற்றி
13. ஓம் அவிரொளி சடையாய் போற்றி
14. ஓம் அகஞ்சுடர் விளக்கே போற்றி
15. ஓம் அகந்தை நோய் அழிப்பாய் போற்றி
16. ஓம் அருமறை முடிவே போற்றி
17. ஓம் அருந்தவர் நினைவே போற்றி
18. ஓம் அரஹரா போற்றி போற்றி
19. ஓம் ஆதியே அருளே போற்றி
20. ஓம் ஆலால கண்டா போற்றி

21. ஓம் ஆதாரப் பொருளே போற்றி
22. ஓம் ஆலமர் குருவே போற்றி
23. ஓம் ஆலவாய் அப்பா போற்றி
24. ஓம் ஆரூரின் தியாகா போற்றி
25. ஓம் ஆடிடும் கூத்தா போற்றி
26. ஓம் ஆடரவு அணியாய் போற்றி
27. ஓம் ஆற்றலே போற்றி போற்றி
28. ஓம் இமையவர் உளத்தாய் போற்றி
29. ஓம் இருட்கறை மிடற்றாய் போற்றி
30. ஓம் இருவினை தவிர்ப்பாய் போற்றி


31. ஓம் இரக்கமே வடிவாய் போற்றி
32. ஓம் இனியசெந் தமிழே போற்றி
33. ஓம் இலக்கியச் செல்வா போற்றி
34. ஓம் இமயவள் பங்கா போற்றி
35. ஓம் இன்னல்கள் களைவாய் போற்றி
36. ஓம் இறைவனே போற்றி போற்றி
37. ஓம் இதயத்தே கனிவாய் போற்றி
38. ஓம் இனிமையே நிறைப்பாய் போற்றி
39. ஓம் இனியவர் மனத்தாய் போற்றி
40. ஓம் இடபவா கனத்தாய் போற்றி


41. ஓம் ஈடிலாப் பிரானே போற்றி
42. ஓம் ஈந்தருள் தேவே போற்றி
43. ஓம் ஈமத்தே குனிப்பாய் போற்றி
44. ஓம் ஈசானத் திறையே போற்றி
45. ஓம் ஈசனே போற்றி போற்றி
46. ஓம் உலகிதன் முதலே போற்றி
47. ஓம் உமையரு பாகா போற்றி
48. ஓம் உள்ளளிர் சுடரே போற்றி
49. ஓம் உணவொடு நீரே போற்றி
50. ஓம் உடுக்கையின் ஒலியே போற்றி


51. ஓம் உடைகரித் தோலாய் போற்றி
52. ஓம் உரைகடந் தொளிர்வாய் போற்றி
53. ஓம் உருவொடும் அருவே போற்றி
54. ஓம் உடையனே போற்றி போற்றி
55. ஓம் ஊரெல்லாம் உவப்பாய் போற்றி
56. ஓம் ஊழினை விதிப்பாய் போற்றி
57. ஓம் ஊங்கார ஒலியே போற்றி
58. ஓம் ஊக்கமே உணர்வே போற்றி
59. ஓம் எல்லையில் எழிலே போற்றி
60. ஓம் எரிதவழ் விழியாய் போற்றி


61. ஓம் எண்குண வடிவே போற்றி
62. ஓம் எருதேறும் ஈசா போற்றி
63. ஓம் எம்பிரான் போற்றி போற்றி
64. ஓம் ஏகநா யகனே போற்றி
65. ஓம் ஏதிலார் புகலே போற்றி
66. ஓம் ஏத்துவார் ஏத்தே போற்றி
67. ஓம் ஏர்முனைச் செவ்வா போற்றி
68. ஓம் ஏந்துகூர் மழுவாய் போற்றி
69. ஓம் ஏகம்பா இறைவா போற்றி
70. ஓம் ஏக்கமே களைவாய் போற்றி


71. ஓம் ஏற்றமே தருவாய் போற்றி
72. ஓம் ஏந்தலே போற்றி போற்றி
73. ஓம் ஐயனே அரனே போற்றி
74. ஓம் ஐம்பூத வடிவே போற்றி
75. ஓம் ஐம்புலன் அவிப்பாய் போற்றி
76. ஓம் ஐயங்கள் களைவாய் போற்றி
77. ஓம் ஒப்பிலா மணியே போற்றி
78. ஓம் ஒளியெறி நுதலாய் போற்றி
79. ஓம் ஒள்ளிழை பாகா போற்றி
80. ஓம் ஒண்குழைக் காதா போற்றி


81. ஓம் ஒப்பிலாய் போற்றி போற்றி
82. ஓம் ஓதுவார் உளத்தாய் போற்றி
83. ஓம் ஓதிடும் பொருளே போற்றி
84. ஓம் ஓய்விலாக் கூத்தா போற்றி
85. ஓம் ஓமென்னும் பொருளே போற்றி
86. ஓம் ஓசையின் ஒலியே போற்றி
87. ஓம் ஓர்மையின் உள்ளே போற்றி
88. ஓம் ஓதுசெந் தமிழே போற்றி
89. ஓம் ஓதிடும் பண்ணே போற்றி
90. ஓம் ஓய்விலாய் போற்றி போற்றி


91. ஓம் கறைதிகழ் கண்டா போற்றி
92. ஓம் காலனைக் கடிந்தாய் போற்றி
93. ஓம் காமனை எரித்தாய் போற்றி
94. ஓம் கந்தனைத் தந்தாய் போற்றி
95. ஓம் கங்கைவாழ் சடையாய் போற்றி
96. ஓம் கண்ணப்பர் முதலே போற்றி
97. ஓம் கண்கள்மூன் றுடையாய் போற்றி
98. ஓம் கருணைமா கடலே போற்றி
99. கடவுளே போற்றி போற்றி
100. ஓம் சிவமெனும் பொருளே போற்றி

101. ஓம் செவ்வொளி வடிவே போற்றி
102. ஓம் தவநிலை முடிவே போற்றி
103. ஓம் தண்பதம் தருவாய் போற்றி
104. ஓம் பவமெலாம் தவிர்ப்பாய் போற்றி
105. ஓம் பரமெனும் பொருளே போற்றி
106. ஓம் புலியூரான் உளத்தாய் போற்றி
107. ஓம் புவிபுரந் தருள்வாய் போற்றி
108. ஓம் புண்ணியா போற்றி போற்றி

Trending News

Latest News

You May Like