இன்றுடன் ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்..!
இந்தியாவில் தாராளமயமாக்கலை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங். 1991-ம் ஆண்டு இந்தியாவில் தரளமயமாக்கல் கொள்கை அரிமுகமானது. 1991-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது நிதி அமைச்சராக பதவி வகித்த மன்மோகன் சிங்தான் இதனை நடைமுறைப்படுத்தினார். அப்போது 1991 அக்டோபரில் முதல் முறையாக ராஜ்யசபா எம்பியானார் மன்மோகன் சிங்.
நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் 2004- ஆம் ஆண்டில் இருந்து 2014- ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார்.
கடந்த 2019- ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு சென்ற அவரின் பதவிக்காலம் இன்றுடன் (ஏப்ரல் 03) முடிவடைகிறது. மன்மோகன் சிங்கின் ஓய்வைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் காலியாகும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பொறுப்பேற்கிறார்
.மேலும் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட 9 பேரின் ராஜ்யசபா எம்பி பதவி காலமும் முடிவடைகிறது. இவர்களில் 8 பேர் தற்போதைய லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். நேற்றும் இன்றும் மொத்தம் 54 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலம் நிறைவடைந்துள்ளது.