கூலி அப்டேட் : சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‛கூலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜை பொறுத்தவரை படத்திற்கு படம் புதுப்புது காம்பினேஷன்களில் நட்சத்திர பட்டாளங்களை தன்னுடன் இணைத்துக் கொள்வார். அந்த வகையில் இந்த படத்தில் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் சத்யராஜ் இணைந்து நடிக்கிறார். அதுமட்டுமல்ல நடிகை ஷோபனாவும் நீண்ட நாட்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த படத்திற்காக ரஜினிகாந்த் உடன் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் கூலி' திரைப்படத்தில் சௌபின் சாகிர் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடம் கவனம் பெற்ற பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர், கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
Kicked to have #SoubinShahir sir joining the cast of #Coolie as #Dayal 💥
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 28, 2024
Welcome on board sir 🔥🔥@rajinikanth sir @anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @sunpictures pic.twitter.com/Cl9eFOpJMO