1. Home
  2. தமிழ்நாடு

மணிப்பூர் அரசியல்வாதிகளையும் முதல்வர் குறித்தும் விமர்சித்த இளைஞர் போலீசார் கண்முன் அடித்து கொலை!!

1

மணிப்பூரில் பைரோன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் மெய்டீஸ் மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே வன்முறை வெடித்து வருகிறது. இந்த மோதலில் 142 பேர் உயிரிழந்த நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணிப்பூர் மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக வன்முறை தீ அணியாமல் எரிந்து கொண்டு இருக்கும் மணிப்பூரில் மறைக்கப்பட்ட மனித தன்மைற்ற கொடுமைகள் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் ஒவ்வொன்றாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. குக்கி இனத்தைச் சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற வன்முறை கும்பல் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததும் 45 வயது பெண்ணை தீயிட்டு கொளுத்தியதும் வெளியாகி பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

murder

இந்த நிலையில் சுராசாந்துபூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் மே 4-ம் தேதி வன்முறை கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சுராசாந்துபூர் கல்லூரியில் பி.ஏ (புவியியல்) படித்து வரும் ஹங்லால்முவான் வாய்பேய் (21) என்ற இளைஞர், குக்கி இன மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் மெய்தி இன அரசியல்வாதிகளையும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் முதல்வர் பைரோன் சிங் குறித்தும் விமர்சித்து எழுதப்பட்ட பதிவை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

Police

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அவரை கைது செய்து மே 4ம் தேதி நீதிபதி முன் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்கு அழைத்துச் சென்ற போது சுற்றி வளைத்த 800 பேர் கொண்ட கும்பல் இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளது. அவர்களை எதிர்கொள்ள முடியாமல் போலீசார் தப்பி ஓடிவிட்டதாகவும் அந்த வன்முறை கும்பலின் வெறி ஆட்டத்தில் இளைஞர் உயிரிழந்து விட்டதாகவும் வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த இளைஞரின் உடலை கூட பெற்றோர் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like