லித்தியம் பேட்டரியுடன் லிப்ட்டில் போன நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! அடுத்த செகண்டே கருகி போனார்..
மின்னணு சாதனங்கள், மின்சார கார்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் போன்றவைகள் சமீபகாலமாகவே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.. எனினும் இதுகுறித்த முறையான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு இல்லாமலேயே பொதுமக்கள் அதனை கையாண்டு வருகிறார்கள்.. அப்படித்தான், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இத்தனை நாளும் வெளிவராத இந்த சம்பவம் தற்போதுதான் வீடியோவாக வெளியாகி, அனைவரையும் கதிகலங்க வைத்து கொண்டிருக்கிறது.
அந்த வீடியோவில், நபர் ஒருவர் லித்தியம் பேட்டரியை எடுத்துக்கொண்டு லிஃப்ட்டுக்குள் நுழைகிறார்.. அந்த லிப்ட்டில் அவரை தவிர வேறு யாருமில்லை.. லிப்ட் கதவு மூடப்பட்ட அடுத்த செகண்டே, அந்த லித்தியம் பேட்டரி வெடித்து சிதறி தீப்பிடித்துவிட்டது.. கதவு மூடப்பட்டதால் அந்த நபரால் வெளியே வரமுடியவில்லை.. லிப்ட்டுக்குள்ளேயே பட்டாசு போல படபடவென வெடிக்கும் சத்தம் மட்டும் வெளியே கேட்கிறது.. இதனால் லிப்ட்-க்கு வெளியே காத்திருந்தவர்கள், பதறிப்போனார்கள்.. அவர்களாலும் உள்ளே எளிதாக நுழைய முடியவில்லை.. இதனால், அங்கிருந்த செக்யூரிட்டிகளை அழைத்து வந்தனர்.. அவர்கள் வந்து, லிப்ட் கதவை திறந்து பார்த்தபோது, லிஃப்ட்டுக்குள்ளேயே அந்த நபர் உடல்கருகி விழுந்து கிடந்தார்.. இந்த வீடியோ நெட்டிசன்களால் இப்போது அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.