1. Home
  2. தமிழ்நாடு

3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை என்கவுன்டரில் சுட்டுக்கொலை..!

Q

உ.பி போலீஸ் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது; மெட்ரோ ரயில் நிலையத்தில் தங்கி வசித்து வந்த ஒரு தம்பதி அலம்பாக் காவல்நிலையத்தில், தனது 3 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 5 போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டு வந்தது. மேலும், குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தோம். அப்போது, சுமார் 3 மணியளவில் வெள்ளை நிற ஸ்கூட்டரில் ஒரு நபர் வருவது தெரிய வந்தது. அந்த நபர் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி தூக்கிக் கொண்டு சென்றான். அந்த ஸ்கூட்டரின் நம்பரை வைத்து, குற்றவாளி 26 வயதான தீபக் வர்மா என்பது அடையாளம் காணப்பட்டது. தண்ணீர் கேன் போடும் வேலையை செய்து வந்துள்ளான்.
குற்றவாளி தீபக்கை பிடிக்க போலீசார் சென்ற போது, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில், பலத்த காயமடைந்த தீபக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான், எனக் கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Trending News

Latest News

You May Like