1. Home
  2. தமிழ்நாடு

போக்சோ பவர் இது தான்..! பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 107 ஆண்டுகள் சிறை..!

W

பொன்னானி நெய்தலூரைச் சேர்ந்தவர் தாமோதரன் என்கிற மோகனன்(60). தமது வீட்டில் 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 11 வயது சிறுவனுக்கு பணம், மது மற்றும் உணவு கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்து பொன்னானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழக்கு பொன்னானி விரைவு சிறப்பு கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வந்தது. 17 சாட்சிகள், 27 ஆவணங்கள் மோகனனுக்கு எதிராக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், மோகனனை குற்றவாளி என்று உறுதிப்படுத்திய கோர்ட், அவருக்கான தண்டனையையும் அறிவித்துள்ளது. தண்டனையை நீதிபதி சுபிதா சிரக்கல் அறிவித்தார்.
Q
அதன்படி, குற்றவாளி மோகனனுக்கு போக்சோ சட்டம் 4 பிரிவு 3 (a)கீழ் 20 ஆண்டுகள் சிறை, ரூ.50,000 அபராதம், போக்சோ சட்டத்தின் கீழ் 80 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3.5லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கூடுதலாக, சிறார் நீதித்துறை சட்டப்பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 107 ஆண்டுகள் சிறையும், ரூ.4.5லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
தீர்ப்புக்கு பின், குற்றவாளி மோகனன் தவனூர் மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார்.

Trending News

Latest News

You May Like