1. Home
  2. தமிழ்நாடு

சிறுமி பாலியல் வன்கொடுமை : வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை..!

1

கடந்த 2020ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் மாயகிருஷ்ணன் (வயது 25) என்பவரை புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் இன்று (13.8.2025) மாயகிருஷ்ணனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.3,000 அபராதம் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விமலா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். 

Trending News

Latest News

You May Like