யூடியூப் சேனல் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த வாலிபர்!

புதுச்சேரியை சேர்ந்தவர் குருபஞ்சராவ்.இவரது மகன் யோகேஷ் என்ற யோகரத்தினம் (வயது 21).இவர்மீது கஞ்சா, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி முகேஷிற்கும் இடையே முன்விரோதம் உள்ளது.
சில வாரங்களுக்கு முன், கிராத்திற்கு செல்லும் சாலையில் முகேஷ் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த யோகரத்தினத்தை நிறுத்தித் தகாத வார்த்தைகளால் திட்டி, வெடிகுண்டு வீசிக் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த யோகரத்தினம் பட்டாசு வாங்கி வந்து யூடியூப் சேனல் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தார்.அதனைத் தனது எதிரி ரவுடி முகேஷ், வீட்டின் சுவற்றில் வீசி வெடிக்க செய்து பரிசோதித்தார். பின்னர் தலைமறைவானார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் யோகரத்தினத்தை தேடி வந்தனர்.பொறையூரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த யோகரத்தினத்தை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.யோகரத்தினத்திடமிருந்து வெடிமருந்து, நூல் உருண்டை, கூழாங்கல், செல்போன் உட்பட பொருட்களைப் பறிமுதல் செய்து, வில்லியனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
யோகரத்தினம் மீது வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.