ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபர்...RPFதுரிதச் செயலால் உயிர் பிழைத்தார்..!

ஸ்ரீராமன் என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவர் ரயில் படிக்கட்டில் அமர்ந்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், திடீரென ரயில் கதவு வேகமாக அடித்ததால், அவர் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார்.
ரயில்வே பாதுகாப்புப் படையினரின் (RPF) துரிதச் செயலால் உயிர் பிழைத்தார். விபத்தில் சிக்கியவரின் நண்பர் அதே பெட்டியில் திருப்பதிக்குச் சென்று கொண்டு இருந்ததால், அவரது உதவியுடன் கைபேசி எண்ணைக் கண்டறிந்து, இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு, நீலிகோணம் பாளையம் அருகே ரயில் தண்டவாளப் புதர் பகுதியில் தேடிய போது, ஒருவர் படுகாயங்களுடன் கைபேசியுடன் இருப்பதைக் கண்டறிந்தது, காயமடைந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீராமன் (38 வயது) என்பது கண்டுபிடித்தனர்.
ஸ்ரீராமனின் தலையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததோடு, உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்தன. சம்பவ இடத்திலேயே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஸ்ரீராமனின் உடல்நிலை இன்று ஆபத்தில் இருந்து மீண்டு உள்ளதாகவும், இருப்பினும் தலையில் ஏற்பட்ட காயங்கள் கடுமையானவையாக உள்ளதால் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்களும் தெரிவித்து உள்ளனர்.