1. Home
  2. தமிழ்நாடு

ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : 20 அடி உயரத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு..!

1

சென்னை சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில் சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சர்தார் 2 படப்பிடிப்பின்போது, 20 அடி உயரத்தில் இருந்து எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாத நிலையில், சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் ஏழுமலையை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் மார்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நள்ளிரவு 1.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like