ராமர் வேடமிட்டவர் மாரடைப்பால் மரணம்...!

டெல்லியின் விஸ்வகர்மா நகரில் ராம்லீலா நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்த போது சுஷில் கௌசிக் (45) என்பவர் ராமர் வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேடையில் ராமராக நடித்துக் கொண்டிக்கும் போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், இதை உணர்ந்த அவர் நிகழ்ந்து நடந்துக் கொண்டிருந்த போதே நெஞ்சில் கை வைத்தபடியே மேடையை விட்டு கீழே இறங்கினார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையிலும், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் ஹரியாணா மாநிலம் பிவானி மாவட்டத்தில், இதே போன்று ராம்லீலா நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்த போது ஹனுமானாக நடித்தவர் ராமரை வேடமிட்டவரின் காலில் விழுந்து மேடையிலேயே மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.