1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடி பயணம் செய்த விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவர் கைது..!

1

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டில் 3 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் கடந்த 11-ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் பிரான்ஸ் புறப்பட்டு செல்வதற்கு முன்பு பிரதமர் மோடி விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த மிரட்டல் அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என்று அந்த மிரட்டலில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி செம்பூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்தனர். கைது செய்த நபரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பிடிபட்ட வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like