மகாகும்பமேளாவில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து பதிவிட்ட இளைஞர் கைது..!

உ.பி மாநிலம் ப்ரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வரும் நிலையில் நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் சென்று திரிவேணி சங்கமத்தில் நீராடினர். பக்தர்கள் வசதிக்காக திரிவேணி சங்கமத்தில் ஆண்கள், பெண்கள் நீராட தனித்தனி இடங்களும், உடைமாற்றும் இடங்களும் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் தான் கும்பமேளாவில் பெண்கள் நீராடும்போதும், உடை மாற்றும்போதும் சிலர் ரகசியமாக வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் உள்ளிட்டவற்றில் ஆயிரங்களில் விலை சொல்லி விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் புனித நீராடும் இடங்களிலும் இதுபோன்ற மோசமான செயல்களை செய்பவர்கள் மீதும், பகிர்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற குரல்கள் எழுந்தது.
இந்நிலையில் கும்பமேளாவில் பெண்கள் குளிப்பது, உடை மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்ட அமித் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்
அதிக பாலோயர்களை இந்த வீடியோக்கள் ஈர்த்து, 'யூடியூப் மூலம் வருவாய் கிடைக்கும் என்பதால் இப்படி செய்ததாக விசாரணையில் கூறியுள்ளார்.