1. Home
  2. தமிழ்நாடு

தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி கைது..!

1

முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று அதிகாலை சென்னை தெற்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் கூறினார். உடனடியாக போலீசார், தி,நகர் துணை ஆணையர் தலைமையில் தேனாம்பேட்டை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினின் இல்லத்தில் சோதனை நடத்தினர்.  

சுமார் ஒரு  மணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இசக்கி முத்து என்பவர் பேசியது தெரிய வந்தது.  

உடனே தேனாம்பேட்டை போலீசார் கன்னியாகுமரி போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இசக்கி முத்து(48) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததை அடுத்து அவரது பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like