1. Home
  2. தமிழ்நாடு

மம்மூட்டியின் கருப்பு - வெள்ளை திகில் படம் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

1

தனது ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தும் மம்மூட்டியின் நடிப்பு திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக வெளிவந்துள்ள படம் பிரம்மயுகம்.

17-ம் நூற்றாண்டில் தெற்கு மலபார் வனப்பகுதிக்குள் வழிதவறி செல்லும் தேவன் (அர்ஜுன் அசோகன்) எப்படி மணக்கால் கொடுமன் பொட்டி (மம்மூட்டி) வீட்டை அடைகிறார். அங்கு கொடுமன் பொட்டியால் என்ன பிரச்னைகளை சந்திக்கிறார், மேலும் சென்ற முதல் நாள் முதலே என்ன விதமான மர்மங்களை எதிர்கொள்கிறார். அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்ற ஒரு திகிலூட்டும் கதையை கருப்பு வெள்ளையில் இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராகுல் சதாசிவன்.

ரொம்பவே எளிமையான ஒரு கதை. மலையாளம் தெரியாதவர்கள் பார்த்தால்கூட எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் ராகுல் சதாசிவன். படம் பார்க்கும்போது மலையாளம் தெரிந்தவர்களுக்கு ஏற்படும், அத்தனை பரவசத்தையும் பயத்தையும் மொழி தெரியாதவர்களுக்கும் இந்தப் படம் கொடுக்கத் தவறவில்லை. முழுக்க முழுக்க கருப்பு - வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், ஒவ்வொரு காட்சியிலும் மர்மங்கள் நிறைந்த சூழலை உருவாக்கி, பார்வையாளர்களை பதைபதைக்க வைக்கிறது.

இப்படம், உலகளவில் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. இந்த நிலையில், இப்படம் வருகிற மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1

Trending News

Latest News

You May Like