1. Home
  2. தமிழ்நாடு

மக்களவை சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு வழங்க மம்தா பானர்ஜி மறுப்பு ?

1

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவில் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். அதே சமயத்தில், இந்தியா கூட்டணி 237 சீட்டுகளை கைப்பற்றி பாஜகவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. 

இந்நிலையில் இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லாவே நிறுத்தப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்றைக்கு காங்கிரஸ் தலையில் குண்டை தூக்கி போட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.சபாநாயகர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் சுரேஷை நிறுத்துவது குறித்து தங்களிடம் காங்கிரஸ் ஆலோசனை நடத்தவில்லை என்று மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், இந்தியா கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளர் சுரேஷ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், சுரேஷை ஆதரிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு செய்யப்படும் என திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றன. திரிணமூல் காங்கிரஸின் இந்த திடீர் அறிவிப்பால் இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending News

Latest News

You May Like