1. Home
  2. தமிழ்நாடு

காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறுவது சந்தேகம் தான் : மம்தா பானர்ஜி..!

1

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் மேற்கு வங்கத்தில் கூட்டணி இல்லாமல் மக்களவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.

மேற்கு வங்கத்தில் தொகுதி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில்தான் தொகுதி ஒதுக்க முடியும் என்று திரிணமூல் காங்கிரஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி, திரிணமூல் கட்சி நிர்வாகிகளிடம் நடத்திய பேச்சும் தோல்வி அடைந்தது. இதற்கிடையே மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தணித்துப் போட்டியிடப் போகிறது என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் பாரத் நியாய யாத்திரை செல்லும்போது, முதல்வர் மம்தா பானர்ஜியை மரியாதை நிமித்தமாக அழைக்கவும் இல்லை, சந்திக்கவும் இல்லை. இது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்குப்பின் காங்கிரஸ் கட்சியை முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலத்துக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு விரைவில் விடுவிக்க வேண்டும் எனக் கோரி, கொல்கத்தாவில் நேற்று முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.

அந்தப் போராட்டத்தின் போது திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் 300 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று நான் கூறுகிறேன், ஆனால் அவர்கள் கேட்க மறுக்கிறார்கள். இப்போது மேற்கு வங்கத்தில் உள்ள முஸ்லிம் வாக்குகளைக் கவர இங்கு வந்திருக்கிறாரக்ள். 300 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டால்கூட 40 இடங்களில் வெல்வார்களா என்பது எனக்கு சந்தேகம்தான்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க எங்களுக்கு விருப்பம்தான். ஆனால், காங்கிரஸ் கட்சி நாங்கள் அளித்த தொகுதியை ஏற்க மறுக்கிறது.

கூட்டணி அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறதோம், 2 சீட்களை தருகிறோம் என்றோம் அவர்கள் மறுத்துவிட்டார்கள். இப்போது மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தணித்து நிற்கப்போகிறது. அப்போதிருந்து எங்களுக்கும், அவர்களுக்கும் பேச்சு இல்லை. நாங்கள் தனித்துப் போட்டியிட இருக்கிறோம், மாநிலத்தில் பாஜகவை வீழ்த்துவோம்.

காங்கிரஸ் கட்சிக்கு நான் சவால் ஒன்றை வைக்கிறோம். இந்தி பேசும் மாநிலங்களில் அதாவது உத்தரப்பிரதேசம், பனாராஸ், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகியவற்ரில் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் துணிச்சல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறதா. மணிப்பூர் பற்றி எரிந்தபோது காங்கிரஸ் கட்சி எங்கு சென்றது. நாங்கள்தானே உதவிக்குழுவை அனுப்பினோம்.

காங்கிரஸ் கட்சி நடத்தும் யாத்திரை பறவைகள் இடம்விட்டு நகர்வது போன்றது. அருமையான புகைப்படங்களை எடுப்பதற்கான வாய்ப்பாக அமையும். இந்தியா கூட்டணியில் நான் இருந்தும் யாத்திரை குறித்து என்னிடம் காங்கிரஸ் கட்சி ஏதும் தெரிவிக்கவில்லை.

நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகள் கூறியபின்புதான் யாத்திரை குறித்து அறிந்தேன். மேற்கு வங்கத்தில் யாத்திரையைக் கடக்க அனுமதிகோரி டேரீக் ஓ பிரையனிடம் கேட்டார்கள். எதற்காக மேற்கு வங்கம் வந்தார்கள். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலி்ல் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 22 இடங்களில் வென்றது, காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும், பாஜக 18 இடங்களையும் கைப்பற்றியது.

Trending News

Latest News

You May Like