வங்கிகளில் கடன் வாங்கி லண்டன் தப்பி சென்ற மல்லையா !! 13,960 கோடி ரூபாய் கடனை திருப்பி தருகிறேன் !! என்னை விட்டுடுங்க
விஜய் மல்லையா இந்திய வங்கிகளிடம் கடனை வாங்கி விட்டு நாடு விட்டு தப்பி சென்றவர். இதனால் அவரை இந்தியா அழைத்து வரும் பொருட்டு வங்கிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடனை பெற்று விட்டு, அதனை கட்டாமல் லண்டனுக்கு தப்பி சென்று விட்டார் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் தலைவர் விஜய் மல்லையா, இந்தியாவில் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர், லண்டன் அரசிடம் தஞ்சமடைந்து அங்கு வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசு உத்தரவிட்டிருந்தது. எனினும் அதில் பல சட்ட சிக்கல்கள் இருப்பதால் இந்தியாக்கு அழைத்து வர முடியாத நிலையே உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இது குறித்தான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் , விஜய் மல்லையா தரப்பில் காரணமே இன்றி நாள் கடத்தி வருகின்றது.
அவரது மதுபான நிறுவன சொத்துகள், அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, அந்த சொத்துகள் மூலம் கடனை திருப்பிச் செலுத்துவதாக அவர் கூறுவதை நிச்சயம் ஏற்க முடியாது. அப்படி நினைப்பவர் இந்தியா வரும் முன் பணத்தினை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யட்டும். மல்லையா மீது திவால் நடவடிக்கை எடுத்து , எங்கள் பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும் விஜய் மல்லையா தரப்பில் 13,960 கோடி ரூபாய் கடனை செலுத்த தயாராக இருப்பதாக, அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உண்மையில் வங்கிகள் சொல்வது போல், இதுவரை விஜய் மல்லையாவே கூட பல முறை நான் 100% கடன் களை திரும்ப செலுத்த தயாராக உள்ளேன் என்றே தனது டிவிட்டல் பதிவில் கூறியுள்ளார்.
Newstm.in