1. Home
  2. தமிழ்நாடு

சசி தரூருக்கு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி? நாடு முக்கியமா, மோடி முக்கியமா.?

1

பிரதமர் மோடியின் ஆற்றல், வேகம் மற்றும் உலகளாவிய ஈடுபாடு இந்தியாவின் சொத்து என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் அண்மையில் கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடியை சசி தரூர் பாராட்டியது காங்கிரஸ் கட்சிக்குள் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சசி தரூருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதில், நமக்கு நாடு தான் முக்கியம். ஆனால், சிலருக்கு மோடி தான் முக்கியம் என்று கூறுகின்றனர். இந்த பதிலடி, காங்கிரஸ் தலைமையில் இருந்து சசி தரூருக்கு வந்திருக்கும் கடுமையான கண்டனமாக பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியை வெளிக்காட்டுகிறது.

சஷி தரூர் பிரபலமான பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பாராட்டியிருந்தார். சசி தரூரின் செயல்பாடு காங்கிரஸ்தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. பல காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூரை விமர்சித்தனர். அவர் காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கு எதிராக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினர். இதற்கு பதிலளித்த சசி தரூர் தான் பாஜகவில் சேரப்போவதில்லை என்று தெரிவித்தார். தனது கருத்து நாட்டின் நலன் மற்றும் ஒற்றுமைக்காகவே என்று விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் கூறுகையில், சசி தரூரின் கருத்து தனிப்பட்ட கருத்து. அது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல. இது காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல என்று தெரிவித்தார். கார்கே கூறுகையில், சசி தரூர் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. அவருடைய மொழி மிகவும் நன்றாக இருக்கும். அதனால் தான் அவரை காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக்கி உள்ளோம்.

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் ராணுவத்துக்கு ஆதரவாக நின்றன. நாடு தான் முதலில் வர வேண்டும், கட்சி பிறகு தான். ஆனால், சிலர் மோடி தான் முதலில் வர வேண்டும், நாடு பிறகு தான் என்று நினைக்கிறார்கள். நாம் என்ன செய்ய முடியும் என்று கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் தன்னை நியமிக்குமாறு சசி தரூர் எம்.பி.கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால், அவரது கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி தலைமை செவிசாய்க்கவில்லை என்று தெரிகிறது. ஆதலால், இந்த முறன்பாட்டால் அவர் பிரதமர் மோடியை பாராட்டி பேசியதாக தெரிகிறது. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் புயலை கிளப்பியுள்ளது. மேலும், இது காங்கிரஸின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like