ஆயுத பூஜை காரணமாக மல்லி பூ ஒரு கிலோ ரூ.1200 க்கு விற்பனை..!
தமிழகத்தில் நவராத்திரி தொடங்கி இருப்பதால், பலர் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்கின்றனர். மட்டுமில்லாமல் அம்மன் கோவில்களிலும் சிறப்பு பண்டிகை நடைபெறுகிறது. மேலும் நவராத்திரியின் சிறப்பு நிகழ்வான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகை வருகிற அக். 23,24 ஆம் தேதிகளில் வர இருக்கிறது. அப்போது வீடுகளிலும், சிறிய தொழில் நிறுவனங்கள், கம்பெனிகளில் வழிபாடு செய்யப்படும்.
வார இறுதி நாள் என்பதால் பல நிறுவனங்களில் இன்றே ஆயுத பூஜை கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் பூக்கள், பழங்கள், வாழை போன்றவை வாங்க மக்கள் பூ மார்க்கெட்டில் குவிந்து இருக்கின்றனர். மேலும் பூக்களின் விலையும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. அதன் படி மல்லி பூ ஒரு கிலோ ரூ.1200க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.600-க்கும், செவ்வந்தி பூ கிலோ ரூ.320க்கும் விற்பனையானது.
தவிர, சம்பங்கி கிலோ ரூ.240, அரளி ரூ.400, ஜாதி பூ ரூ.800, ரோஜா ரூ.300, கலர் செவ்வந்தி ரூ.240, தாமரை ஒன்று ரூ.40, செண்டு மல்லி ரூ.80, கோழிக்கொண்டை ரூ.120, மஞ்சள் அரளி ரூ.400, மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.30, வாடாமல்லி ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.