1. Home
  2. தமிழ்நாடு

மின்சார வேலியில் சிக்கி ஆண் யானை மரணம்!

1

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள், உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில், அவர்கள் யானைகளை வனப்பகுதிக்குள் திருப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில், அத்தாணி, காக்காச்சி குட்டை பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற விவசாயி, பொன்னாச்சி அம்மன் கோயில் அருகில் உள்ள தனது நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். யானைகள் கரும்பு தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளார்.

விவசாயிகள் வாக்குவாதம்:

அப்போது அங்குத் திரண்ட விவசாயிகள், மின்சாரத்தை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட வன அலுவலர் கே.வி.நாயுடு-வை முற்றுகையிட்ட விவசாயிகள், யானை உயிரிழந்த சம்பவத்தில் விவசாயி தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், மின்சாரத்தை எதற்காகத் துண்டிக்கிறீர்கள் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், யானைகளை விவசாய நிலங்களில் புகாமல் தடுப்பதற்கான வனத்துறையின் நடவடிக்கைகள்குறித்து கேள்வி எழுப்பிய விவசாயிகள், மனித உயிர்களைக் காக்க வனத்துறை தவறி விட்டதாகக் குற்றஞ்சாட்டினர்.

யானை இறந்ததைக் காரணமாகக் கொண்டு மின்சாரத்தை முழுமையாகத் துண்டித்தால், தண்ணீர் பாய்ச்சாமல், பயிர்கள் வாடி விடும். யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள், வனப்பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுக்க சூரிய ஒளி மின்வேலி அமைத்தும், அகழிகளை வனத்துறை மேற்கொண்டு இருக்கிறது.

Trending News

Latest News

You May Like