1. Home
  2. தமிழ்நாடு

நீரியல் துறை ஒப்பந்தத்தில் இருந்து மாலத்தீவு வெளியேறியது..!

1

மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்று பதவி ஏற்றார். சீனாவின் ஆதரவாளராக கருதப்படும் அவர், மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வலியுறுத்தினார். 

இந்த நிலையில் இந்தியாவுடனான நீரியல் துறை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து மாலத்தீவு வெளியேறியுள்ளது. இந்த ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மாலத்தீவு சென்ற போது கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய கடற்படை, மாலத்தீவில் விரிவான ஹைட்ரோகிராபிக் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. 

இந்த ஒப்பந்ததத்தில் இருந்து வெளியேறும் முடிவை மாலத்தீவு அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like