1. Home
  2. தமிழ்நாடு

பிரபல மலையாள நடிகை மினு முனீர் கைது..!

Q

சீரியலில் நடிக்க வைப்பதாகக் கூறி 10 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது சிறுமியை பிரபல மலையாள நடிகை மினு முனீர் சென்னை அழைத்து வந்துள்ளார். அங்கு சிறுமியிடம் 4 பேர் அத்துமீறியதாக சொல்லப்படுகிறது.

இதில், பாதிக்கப்பட்ட சிறுமி, தற்போது போலீஸில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் கேரளாவில் இருந்த நடிகை மினு முனீரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். திருமங்கலம் போலீசார், சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே, பிரபல மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடைவேளை பாபு ஆகியோர் மீது மினு முனீர் பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பியிருந்தார்.

Trending News

Latest News

You May Like