மலையாள நடிகர் மம்மூட்டி சகோதரி காலமானார்..!

மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவருக்கு இரண்டு சகோதரர்களுடன் அமீனா, சவுதா மற்றும் ஷஃபியா என்ற மூன்று சகோதரிகள் உண்டு.
அவர்களில் ஆமினா வயது மூப்பு காரணமாக இன்று காலை மரணம் அடைந்தார். இவரது கணவர் காஞ்சிரப்பள்ளி பாறைக்கால் பகுதியை சேர்ந்தவர்.
நடிகர் மம்முட்டியின் தாயார் கடந்த ஏப்ரல் மாதம் காலமான நிலையில் ஆறு மாதத்தில் சகோதரியும் இயற்கை எய்தியுள்ளளது மம்முட்டியின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மலையாள திரையுலகினர் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.