மலையாள நடிகர் கலாபவன் ஹனீப் மரணம்..!
எர்ணாகுளம் மாவட்டம் மட்டஞ்சேரியைச் சேர்ந்தவர் கலாபவன் ஹனீப் (58). இவரது தந்தை ஹம்சா, தாய் சுபைதா. இவருக்கு வாஹிதா என்ற மனைவியும், ஷாரூக் ஹனீப், ஸித்தாரா ஹனீப் என இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
கடந்த ஆண்டு ஷாரூக் ஹனீபின் திருமணம் நடந்திருந்தது. இந்த நிலையில் நுரையீரல் சம்பந்தமான பிரச்னை காரணமாக சில நாள்களாக சிகிச்சைபெற்று வந்தார்.
எர்ணாகுளத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை அவர் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று காலை 11 மணிக்கு மட்டஞ்சேரியில் நடக்கிறது.