1. Home
  2. தமிழ்நாடு

ரூ.2,000 தரும் மத்திய அரசு… பட்டியலில் உங்க பெயர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!!

ரூ.2,000 தரும் மத்திய அரசு… பட்டியலில் உங்க பெயர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!!

நாடு முழுவதும் நலிந்த விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மூன்று தவணைகளாக தலா ரூ.2000 என ஒரு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதுவரையில் மொத்தம் 9 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. பத்தாவது தவணைப் பணம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்குப் பிறகு வரவிருக்கிறது. ஆனால் இத்திட்டத்தின் கீழ் பல விவசாயிகள் இணையாமல் உள்ளனர்.

அதேபோல, பிஎம் கிசான் திட்டத்தில் நிறையப் பேருக்கு பணம் வந்துசேருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அவர்களின் பெயர், வங்கிக் கணக்கு விவரம், ஆதார், மொபைல் நம்பர் போன்ற தகவல்களைத் தவறாக வழங்கியிருந்தாலும் நிதியுதவி சரியாக வந்துசேராது.

ரூ.2,000 தரும் மத்திய அரசு… பட்டியலில் உங்க பெயர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!!

இத்திட்டத்துக்கான நிதியுதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
இந்நிலையில் 10ஆவது தவணைப் பணம் உங்களுக்கு வருமா, இல்லையா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் அதை நீங்களே உறுதிபடுத்திக்கொள்ளலாம். வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக சரிபார்க்கலாம்.

ரூ.2,000 தரும் மத்திய அரசு… பட்டியலில் உங்க பெயர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!!

pmkisan.gov.in என்ற பிஎம் கிசான் வெப்சைட்டில் சென்று 'Beneficiary Status' என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது நீங்கள் இரண்டில் ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். 1.ஆதார் நம்பர், 2.மொபைல் நம்பர்.

இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ’Get Data' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்களுடைய விண்ணப்ப நிலையை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

ரூ.2,000 தரும் மத்திய அரசு… பட்டியலில் உங்க பெயர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!!

10ஆவது தவணைப் பணம் கிடைக்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்குள் உங்களுடைய பெயர் பட்டியலை சரிபார்ப்பது நல்லது. ஒருவேளை உங்களுடைய பயனாளர் தகவல்கள் தவறாக இருந்தால் அதை பிஎம் கிசான் வெப்சைட்டிலேயே அப்டேட் செய்துவிடலாம். அதன் பிறகு பணம் வருவதில் சிக்கல் ஏற்படாது.

newstm.in

Trending News

Latest News

You May Like