தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றம்..! வெளியான புதிய அமைச்சர்களின் லிஸ்ட்!

கடந்த சில நாட்களாகவே தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வழக்கு விசாரணை காரணமாக செந்தில் பாலாஜியும் சர்ச்சை பேச்சு காரணமாக பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவார்கள் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளனர். சிவசங்கர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு மின்சாரத் துறை கூடுதாக ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வனத்துறையை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பணுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா இன்று (ஏப்ரல் 28) மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.