யுபிஐ பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றம்..! இனிமேல் 10 வினாடிகள் தான்..!

Failed Transaction சமயங்களில் பணம் Deduct ஆகிவிட்டதா என்பதை தெரிந்துகொள்ளும் நேரமும், Transaction Reversal நேரமும் 30 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
யுபிஐ ஐடியை சரிபார்க்க விரும்பினால் அதற்கான ரெஸ்பான்ஸ் நேரமும் 15 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.இந்த மாற்றங்கள் பணப்பரிவர்த்தனைகளை விரைவாகவும், பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் (PSPs) இந்த புதிய நேர வரம்புகளுக்கு ஏற்ப தங்கள் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இதனால், பணப்பரிவர்த்தனைகள் தோல்வியடையும் அல்லது தாமதமாவதற்கான வாய்ப்புகள் குறையும், மேலும் பயனர்கள் விரைவாக பணம் செலுத்துவது அல்லது பெறுவது உறுதி செய்யப்படும்.இந்த மாற்றங்கள் PhonePe, Google Pay, Paytm போன்ற UPI பயன்பாடுகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உதாரணமாக, ஒரு கடையில் க்யூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் முழு செயல்முறையும் இனி 15 வினாடிகளில் நிறைவடையும். நிலுவையில் உள்ள பரிவர்த்தனைகளை சரிபார்க்கவும் புதிய விதிகள் வந்துள்ளன. முன்பு 90 வினாடிகள் காத்திருக்க வேண்டும், இப்போது 45-60 வினாடிகளுக்குள்ளேயே சரிபார்க்கலாம். இதனால் தொழில்நுட்ப சிக்கல்களுக்கும் விரைவான தீர்வு கிடைக்கும்.
இந்த மாற்றங்கள் யுபிஐ பரிவர்த்தனைகளை விரைவுபடுத்துவதோடு, தோல்விகளால் ஏற்படும் குழப்பங்களையும் குறைக்கும். உடனடி உறுதிப்படுத்தல் கிடைப்பதாலும், விரைவான பதில்களாலும் பயனர்களுக்குக் கூடுதல் தெளிவும் நம்பிக்கையும் கிடைக்கும். நெட்வொர்க் கோளாறு போன்ற காரணங்களால் யுபிஐ சிஸ்டத்தை அடையாத பரிவர்த்தனைகள் தானாகவே தோல்வியடைந்ததாக குறிக்கப்படும். இது நேரத்தை சேமிக்கும்.
மொத்தத்தில் உங்கள் யுபிஐ கட்டண அனுபவம் இனி வேகமாகவும், நம்பகத்தன்மையுடனும் இருக்கும். பணம் செலுத்துவது வெற்றியடைந்ததா அல்லது தோல்வியடைந்ததா என்பதை விரைவாக அறிந்துகொள்ளலாம்.