1. Home
  2. தமிழ்நாடு

பி.எம்.கிசான் 20-வது தவணையில் முக்கிய மாற்றம்...!

1

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan) திட்டம் மத்திய அரசால் 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. நலிவடைந்த விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில், ஆண்டுதோறும் ரூபாய் 6 ஆயிரம் என 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ.2000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் இதுவரை 19 தவணைகளாக தொகை வழக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் தற்போது 20வது தவணையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 19வது தவணை மூலம் 10, 04, 67,693 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என PM கிசானின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

முதல் தவணை நிதி ஏப்ரல்-ஜூலை மாதங்களிலும், இரண்டாவது தவணை நிதி ஆகஸ்ட்-நவம்பர் மாதங்களிலும், மூன்றாவது தவணை நிதி டிசம்பர்-மார்ச் மாதங்களிலும் டெபாசிட் செய்யப்படும். 

PM கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிக்க யார் தகுதியானவர்கள்?

  • இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்
  • சிறு அல்லது குறு விவசாயியாக இருக்க வேண்டும்
  • விளைச்சலுக்கு ஏற்ற நிலம் வைத்திருக்க வேண்டும்.
  • 10 ஆயிரம் அல்லது அதற்கு மேல் ஓய்வூதியம் பெற கூடாது.
  • 2 ஹெக்டேர் மற்றும் அதற்கு கீழ் சாகுபடி செய்யக்கூடிய நிலம் இருக்க வேண்டும்.
  • வருமான வரித்தாக்கல் செய்பவராக இருக்கக்கூடாது
  • நிறுவன நில உரிமையாளராக இருக்கக்கூடாது

இந்நிலையில் பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் அடுத்த தவணை விடுவிப்பது தொடர்பாக  மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் இன்று உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது நாடு முழுவதும் உள்ள 731 வேளாண் அறிவியல் மையங்கள் (KVKs), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களின் இயக்குநர்கள், துணைவேந்தர்கள் மற்றும் தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் மெய்நிகர் முறையில் கலந்து கொண்டனர். திட்டத்தின் அடுத்த தவணை ஆகஸ்ட் 2 ஆம் தேதி விடுவிக்கப்படும். வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும், அதிகபட்ச விவசாயிகளை இந்த பலன் சென்றடைவதை உறுதி செய்யவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தேசிய, மாநில, மாவட்ட மற்றும் கிராம மட்டங்களில் உள்ள விவசாயிகளை இந்த திட்டத்துடன் இணைக்குமாறு அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார், மேலும் இந்த நிகழ்வை நாடு தழுவிய பிரச்சாரமாக ஏற்பாடு செய்ய அழைப்பு விடுத்தார்.நேரடி பலன் பரிமாற்றத்தை உறுதி செய்வதாலும், பொது விழிப்புணர்வு பிரச்சாரமாக மேற்கொள்ளப்படுவதாலும், முறையான ஏற்பாடுகளை நிறைவேற்ற அவர் அழைப்பு விடுத்தார். மேலும் இந்த திட்டத்தை ஒரு திருவிழாவாகவும் ஒரு இயக்கமாகவும் கொண்டாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் விவசாயிகள் முனைப்புடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுகொண்ட மத்திய அமைச்சர் திட்டத்தின் மூலம் பயனடையவும், விவசாய மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து தொடர்ந்து அறிந்திருக்கவும் இது ஒரு வாய்ப்பு என்று கூறினார்.பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், அதிகபட்ச எண்ணிக்கையிலான விவசாயிகளைச் சென்றடைவதற்காக இந்தத் திட்டம் முழு பங்கேற்பு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படுத்தப்படும் என்று சௌஹான் உறுதிப்படுத்தினார்.

Trending News

Latest News

You May Like