1. Home
  2. தமிழ்நாடு

நாளை மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய மாற்றம்..!

1

சென்னையில் நாளை நடைபெற உள்ள மாரத்தான் போட்டி காரணமாக  நாளை ஜனவரி 06 ஆம் தேதி மெட்ரோ ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளை (06.01.2024) சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. இந்த மாரத்தான் ஓட்டமானது நாளை நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மெட்ரோ ரயில் சேவைகளிலும் நாளை பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மாரத்தான் ஓட்டம் ஆனது நாளை அதிகாலை 4 மணி முதல் தொடங்கப்பட உள்ளது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கமாக காலை 5 மணிக்கு இயக்கப்படும். ஆனால் சென்னை மாரத்தான் ஓட்டம் காரணமாக நாளை அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

சென்னை மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் சென்னை ரன்னர்ஸ் இணைந்து சிறப்பு QR குறியீடு பதியப்பட்ட பயண அட்டையை வெளியிட்டுள்ளது. இதனை பயன்படுத்தி 06.01.2024 அன்று மட்டும் மெட்ரோ ரயில்-ல் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி இந்த QR குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் வாகன நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் இந்த இலவச சேவையைப் பயன்படுத்தி கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like