1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் அதிமுகவில் இணைந்த மைத்ரேயன்..!

1

1991ம் ஆண்டு பாஜகவில் இணைந்த மைத்ரேயன், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், மாநில துணைத்தலைவராகவும் இருந்தார். 1999ம் ஆண்டு பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்த மைத்ரேயன், 2001ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சென்னை மைலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில், இவரை எதிர்த்து போட்டியிட்ட அப்போதைய பாஜக மாநில தலைவர் லட்சுமணன் வெற்றி பெற்றார்.

இதையடுத்து 2002ம் ஆண்டு அதிமுக சார்பில் மைத்ரேயன் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 3 முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மைத்ரேயன், 2019 வரை அப்பொறுப்பில் இருந்தார். அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, ஓபிஎஸ் பக்கம் சேர்ந்தார் மைத்ரேயன். பின்னர், இபிஎஸ் அணிக்கு சென்றார். அதன்பிறகு ஓபிஎஸ்-ஐ சந்தித்ததன் காரணமாக கடந்த 2022ம் ஆண்டு அவரை அதிமுக கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
அரசியலில் எந்த கட்சியிலும் தொடர முடியாமல் தவித்த மைத்ரேயன், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் முன்னிலையில், மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மைத்ரேயன் பாஜகவில் சேர்ந்தாலும், அவருக்கு பெரிய பதவி எதுவும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மைத்ரேயன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு எதற்காக நடந்தது என்று தெரிவிக்கப்படவில்லை. மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் சேர திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில் எடப்பாடியார் மட்டுமே தமிழகத்தின் நம்பிக்கை என்பதை உணர்ந்து பாஜகவில் இருந்து விலகி எடப்பாடியார் தலைமையில் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்.


 

Trending News

Latest News

You May Like