1. Home
  2. தமிழ்நாடு

உடனடியாக அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் - மஹூவ மொய்த்ராவுக்கு உத்தரவு..!

1

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து அப்போது திரிணாமுல் எம்.பி.யாக இருந்த மஹூவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டு குறித்து பாஜக எம்பி வினோத் குமார் சோன்கர் தலைமையிலான மக்களவை நெறிமுறை குழு விசாரணை நடத்தி,அதன் அறிக்கையை கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி வெளியிட்டது.

நாடாளுமன்ற நெறிமுறை குழு விசாரணை அறிக்கையில், மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. அந்த பரிந்துரையை ஏற்று மக்களவை உறுப்பினராக இருந்த மஹூவா மொய்த்ராலை கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி பதவி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் எம்.பி. பதவியில் இருந்து மஹூவா மொய்த்ரா நீக்கப்பட்டத்தை அடுத்து அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை ஜனவரி 7-ம் தேதிக்குள் காலி செய்யவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு பங்களாவை ஒதுக்கீடு செய்யும் அரசு எஸ்டேட் இயக்குனரகம் தெரிவித்திருந்தது.

தனது எம்பி பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மஹூவா மொய்த்ரா வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், டெல்லியில் அவருக்கு அளிக்கப்பட்ட அரசு குடியிருப்பை காலி செய்யும்படி "எஸ்டேட் இயக்குனரகம்" உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யும்படியும், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அரசு குடியிருப்பில் தங்க அனுமதிக்கும்படியும் உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மஹூவா மொய்த்ரா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத்"சில சந்தர்ப்பங்களில் விதிவிலக்காக அரசு குடியிருப்பில், குறிப்பிட்ட காலம் வரை கூடுதலாக தங்குவதற்கு அனுமதி அளிக்க விதிமுறைகள் உள்ளன. இது தொடர்பாக எஸ்டேட்ஸ் இயக்குனரகத்திடம் முறையிடுங்கள். அங்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்"என்று உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like