வரும் 20ம் தேதி வரை மகாவிஷ்ணுவை புழல் சிறையில் அடைக்க உத்தரவு..!
அரசு பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள்குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார்.
சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் செய்யப்பட்டார்.
திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளைக்கு மகாவிஷ்ணுவை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், வரும் 20ம் தேதிவரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.