1. Home
  2. தமிழ்நாடு

மகாவிஷ்ணுவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்..!

1

கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி மாணவர்கள் மத்தியில் மகாவிஷ்ணு ஆற்றிய உரை மூடநம்பிக்கைகளை பரப்பும் விதத்தில் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் பற்றி அவதூறான வார்த்தைகளை குறிப்பிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக மகாவிஷ்ணு மீது மாற்றுத் திறனாளிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும் என ஏற்கனவே சைதாப்பேட்டை, திருவெற்றியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், விமான நிலையத்தில் இருந்து மகா விஷ்ணுவை போலீசார் அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு கடந்த 7ம் தேதி கைது செய்தனர்.

மகாவிஷ்ணு மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, சமூகத்தில் வெறுப்பான தகவல்களை பரப்புவது, பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசுவது, மதம் இனம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது, மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக குற்றம் செய்வது ஆகிய ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

அரசுப்பள்ளியில் மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் பேசியதால் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செப் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு அளித்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். மகாவிஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு குறித்து விசாரித்த நீதிபதி, மகாவிஷ்ணுவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like