மகாராஷ்டிரா டிரக் விபத்து : பதறவைக்கும் சிசிடிவி வெளியீடு..!!

மகாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியில் உள்ள மும்பை- ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று வழக்கம் போல் போக்குவரத்து நடைபெற்று கொண்டிருந்தது. காலை 10.45 மணி அளவில் அந்த வழியாக அதிவேகத்தில் வந்த டிரக் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையி தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் முன்னால் சென்ற கார் மற்றும் இருசக்கர வானங்கள் மீது மோதியவாறு சாலையோறத்தில் இருந்த உணவகத்திற்குள் புகுந்தது. இந்த விபத்து தொடர்பான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | CCTV visuals of the accident in Dhule, Maharashtra where seven people have died and 28 others got injured. The accident took place in Shirpur taluka of Dhule district, earlier today. pic.twitter.com/zfGtyvWEmo
— ANI (@ANI) July 4, 2023

உணவகத்திற்குல் டிரக் புகுந்த கோர விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 28க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிரக்கின் பிரேக் புடிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.