1. Home
  2. தமிழ்நாடு

இன்றுடன் நிறைவுபெறுகிறது மகா கும்பமேளா : போலீசார் கடும் கட்டுப்பாடு விதிப்பு..!

1

பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் தினமும் 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இங்கு வருகை தந்த பக்தர்கள் எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், ஒன்றரை மாதமாக விமரிசையாக நடந்து வரும் கும்பமேளா, மகா சிவராத்திரி தினமான இன்றுடன் (பிப்.26) நிறைவடைகிறது. இதை யொட்டி, உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


இதனால், அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயிலில் வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.


இதுகுறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் யஷ்வந்த் சிங் கூறும்போது, "ரயில் வரும்போது மட்டுமே பக்தர்கள் நடைமேடைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நகரை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.


இதுகுறித்து மகா கும்பமேளா சிறப்பு டிஐஜி வைபவ் கிருஷ்ணா கூறியதாவது: திரிவேணி சங்கமத்தில்நிறைவு நாளான 26-ம் தேதி கும்பமேளாவில் அதிக அளவிலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இன்றுடன்  நிறைவு பெற இருப்பதால் பிரயாக்ராஜ் வருவோர்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். முன் எப்போதும் இல்லாத வகையில் நாளைய தினம் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


அதன் ஒரு பகுதியாக, கூட்டத்தை கட்டுப்படுத்த ஏதுவாக பிரயாக்ராஜ் முழுவதும் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறிகள், மருந்து பொருட்கள், எரிபொருள் உள்ளிட்ட அவசியங்களுக்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்து உள்ளனர்.


அத்தியாவசிய தேவைகளுக்காக மருத்துவர்கள், காவலர்கள், நிர்வாக அதிகாரிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரயாக்ராஜ் பகுதியில் எந்த இடத்தில் மக்கள் வருகின்றனரோ, அதன் அருகில் நீராட வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.

Trending News

Latest News

You May Like