1. Home
  2. தமிழ்நாடு

பிரசித்திப்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேகம்..!

1

காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே 108 திவ்ய தேசங்களில், 4 திவ்ய தேசங்களை கொண்ட ஒரே திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஆரணவல்லித் தாயார் சமேத அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இங்கு மேற்கே திருமுக மண்டலத்துடன் திரிவிக்ரம அவதார வடிவத்தில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஸ்ரீ ஊரகத்தான் சன்னதி, ஸ்ரீ காரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ நீரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ கார்வானப் பெருமாள் சன்னதி என நான்கு திவ்ய தேசங்கள் இங்கு அமைந்து உள்ளது.

இந்நிலையில் உலகளந்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் மேற்கொள்ளுவதற்கு பல்வேறு திருப்பணி கடந்த இரண்டு வருடமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று அனைத்து பணிகளும் நிறைவுபெற உள்ளது.

ஸ்ரீ உலகளந்த பெருமாள் சந்நிதி, ஆரணவல்லித் தாயார் சந்நிதி, ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு வண்ணங்கள் தீட்டப்பட்டு உள்ளது. மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில் ஆறு யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு வரும் 25ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளது.

முதல் நாள் ஒரு கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து இரு நாட்கள் இரு யாக சாலை பூஜைககள் நடைபெற உள்ளது. இந்த கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 28 அன்று (புதன்கிழமை) காலை 10:30 மணிக்கு மேல் விமரிசையாக நடைபெற உள்ளது.
 

இந்த கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மோ.அன்பரசன், இந்து சமய அறநிலை துறை உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

Trending News

Latest News

You May Like