1. Home
  2. தமிழ்நாடு

இன்று நடக்கவிருக்கும் மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : அமைச்சர் புறக்கணிப்பு..!

1

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, ‘’சங்கரய்யா யார் என்பதை ஆளுநர் விவரம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்திருக்க வேண்டும். அவர் சுதந்திர போராட்ட வீரர் என்பதையாவது ஆளுநர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கல்லூரி இறுதி ஆண்டின் போது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று 5 வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்தவர். இதையெல்லாம் தெரியாமல் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க அனுமதி மறுப்பது ஏன்? என்பதை ஆளுநர் தெரிவிக்க வேண்டும்.

இதைவிட மோசமான ஆளுநர் இருந்தது இல்லை. சங்கரய்யா பற்றி தெரியவில்லை என்றால் கேட்டு அறிந்திருக்க வேண்டும். நாளை(இன்று) மதுரையில் நடக்க உள்ள பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்ளப் போவதில்லை. அதை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளேன். ஆளுநர் மறுத்தப்பிறகும் அந்த பல்கலைக்கழகம் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளது.

ஆளுநர் எந்தவிதமான சட்டங்களையும் மதிப்பதில்லை. சங்கரய்யாவுக்கு ஏன் டாக்டர் பட்டம் கொடுக்க அனுமதி வழங்கவில்லை என்பது குறித்த காரணத்தை வெளியிட தயாரா? நடிப்பு சுதேசியாக இந்த ஆளுநர் இருப்பது வருந்தத்தக்கது. ஆர்எஸ்எஸ்ஸில் இருந்து வந்தவர் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதனால் தான் அவர் பொதுவுடமைவாதியான சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க அனுமதி அளிக்க மறுக்கிறார்.

பொய் சொல்வதையே செய்து வருகிறார் ஆளுநர். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் எவ்வளவு பொய் கூறினார். தமிழக அமைச்சரவை சொல்வதை, செய்ய வேண்டியது தான் ஆளுநரின் வேலை. மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. வேண்டும் என்றால் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, நினைத்ததை செய்யட்டும்’’ என்றார்.

Trending News

Latest News

You May Like