1. Home
  2. தமிழ்நாடு

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று உறுதி!

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று உறுதி!


மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா பரவல் ஏற்பட்ட காலத்தில் இருந்து தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், இன்று எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் உள்ளேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று உறுதி!

newstm.in

Trending News

Latest News

You May Like