1. Home
  2. தமிழ்நாடு

வைகை ஆற்றுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கினார் மதுரை சி.பி.எம். வேட்பாளர்..!

1

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார் சி.பி.எம்.வேட்பாளர் சு.வெங்கடேசன். இவர் இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இன்று மதுரை கல்பாலம் பகுதியில் இருக்கும் வைகை ஆற்றில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர்  கல்பாலம் சாலை வழியாக சென்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார் சு.வெங்கடேசன். தொடர்ந்து சிம்மக்கல் பகுதியில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் ஏறி பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், கடந்த 2011ம் ஆண்டு முதல் மத்திய தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் மதுரை மத்திய தொகுதியில் திமுக மகத்தான வெற்றி பெற்று இருக்கிறது. எனவே இந்த ஆண்டும் கூடுதலாகச் சென்ற தேர்தலில் 10 சதவீத வாக்குகள் பெற்ற மக்கள் நீதி மையம் நம்மோடு இணைந்து இருக்கிறது. 

2016, 2019, 2021, 2022 இல் செய்த சாதனைகளை இந்த ஆண்டு அதையும் தாண்டி மீண்டும் ஒரு சாதனையை செய்ய வேண்டும். இது சாதாரண தேர்தல் அல்ல. ஏற்கனவே ஒரு தலைமுறையினருடைய  எதிர்காலத்தை சீர்குலைக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு முறை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஜனநாயகம் எல்லாம் நீடிக்குமா என்ற அச்சம் வரக்கூடிய நிலையில் இது போன்ற ஒரு சூழ்நிலையில் நாம் செய்ய வேண்டிய பணி நம்முடைய வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நாடு முழுவதும் மக்கள் விழிப்புணர்வோடு அதை செய்வார்கள் என்று நம்பி நாட்டின் எதிர்காலத்திற்கு நான் செய்ய வேண்டிய பணி சிறப்பாக செய்வேன். உங்கள் அனைவருக்கும் வெற்றிக்காக இன்று எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர்களின் நாகரிகம் இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய வைகை கரை நாகரீகம் பிறந்த வைகை நதியை வணங்கி எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கின்றேன். கடந்த கால சாதனைகளை சொல்லி செய்யப் போகின்ற திட்டங்களைச் சொல்லி நாங்கள் வாக்குகள் சேகரிக்க உள்ளோம் என்றி கூறினார்.

அதன் பின்னர் அப்பகுதி வீதிகளில் நடந்தது சென்று செய்யப்போகின்ற திட்டங்களைச் சொல்லி வாக்கு சேகரித்தார். அமைச்சர் பிடிஆர், மதுரை வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் தளபதி, மதுரை மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Trending News

Latest News

You May Like