மதுரை அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டு லோகாவை ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

அ.தி.மு.க.பொதுச்செயலாளரும்,தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி அ.தி.மு.க.வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அ.தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் வந்து கலந்து கொள்ள வேண்டுமென திருவள்ளூர் தெற்கு மாவட்ட மாணவரணி பொருளாளர் திருவேற்காடு டாக்டர் ச.வெங்கடேசன் 1007 ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை ஸ்டிக்கர் ஒட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட மாணவரணி பொருளாளர் திருவேற்காடு டாக்டர் ச.வெங்கடேசன் பேசியதாவது-
தமிழக மக்கள் நலன் ஒன்றே கருதி வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆர், அம்மா அவர்களின் வழியில், அவர்களது நல்லாசியுடன் தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான எடப்பாடியார், தமிழ்நாட்டு மக்களுக்காவே இரவு,பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கிறார். தற்போது எதிர்க்கட்சிதலைவராகவும், மக்களுக்காக தி.மு.க.ஆட்சியை எதிர்த்தும் குரல்கொடுத்து வருகிறார். எதையும் துணிச்சலோடு சந்தித்து வருகிறார்.
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடியார் அம்மா அறிவித்த தாலிக்குதங்கம், திருமண நிதியுதவி, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப்,நோட்டுபுத்தகம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா பரிசு நலப்பெட்டகம், தமிழ்நாட்டில் அனைத்து பஸ்நிலையங்களிலும் பாலூட்டும் தாய்மார் களுக்கு அறை, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் உள்ளிட்ட எண்ணிலடங்கா திட்டங்களை நிறைவேற்றி மக்கள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மக்கள் நலுனுக்காகவே அயராது பாடுபட்டார். ஏழை மக்களுக்கு அம்மா அறிவித்த ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியவர் தான் எடப்பாடியார். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் அறிவிக்கும்வேட்பாளர்கள் அனைவரும் அமோக வெற்றி பெறுவார்கள். தமிழக முதல்வராக மீண்டும் எடப்பாடியார் ஆட்சியில் அமருவார் இது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.