1. Home
  2. தமிழ்நாடு

ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்..!

1

காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி பெலிக்ஸ் ஜெரால்டு தாக்கல் செய்த மனுவில், நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் பதியபட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்க மாட்டேன் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவில் வழக்கறிஞர், உள்நோக்கத்துடன் இந்த கேள்விகளை மனுதார் கேட்டதாகவும். காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உயர் அதிகாரிகள் பெயர்களை குறிப்பிட்டு பேசியதாகவும் தொடர்ந்து இது போன்ற செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சவுக்கு சங்கரை தூண்டும் வகையில் செயல்பட்டார் என எனவே ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 47 நாட்களாக சிறையில் இருந்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட அந்த கருத்திற்கும் தமக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை எனவும் இதற்காக மன்னிப்பு கோருவதாகவும் விசாரணை முடிவடைந்து விட்டதாகவும், இதுவரை 87 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறினார். அப்போது நீதிபதி சம்பந்தப்பட்ட இந்த கேள்விகளை எடிட் செய்திருக்கலாம் என தெரிவித்தார். இதனை அடுத்து உத்தரவிட்ட நீதிபதி தமிழ்செல்வி, வழக்கில் மனுதாரருடைய கேள்வி உள்நோக்கம் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது. ஒரு தவறான தகவல் கொண்ட பிரச்சினையை தூண்டும் வகையில் மனுதார் கேள்வி உள்ளது. மேலும் மனுதாரர் ஒரு பாமரர் அல்ல எனவும் அவர் நன்கு படித்தவர். எனவே தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது மனு தள்ளுபடி செய்யவதாக உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like