சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரிய மனு : சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

பெண் போலீசார் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மருத்துவமனையில் சவுக்கு சங்கர் சேர்க்கப்பட்டார்.மே 4ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசாரால் தேனியில் கைது கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கை எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், போலீசார் அடித்து துன்புறுத்துவதாகவும் பரபரப்பு புகார் அளித்திருந்த நிலையில், மருத்துமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாய் கமலா, அளித்த மனுவை 2 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.