1. Home
  2. தமிழ்நாடு

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு 45 நாட்கள் விடுமுறை..!

1

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. கோடை காலத்தின் ஆரம்பத்திலேயே வெப்பநிலை அதிகபட்சமாக உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு பொருந்தும் வகையில் மத்திய பிரதேச கல்வித்துறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அறிவிப்பில் நடப்பாண்டு கோடைகால விடுமுறைகள் மே 1ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 15ஆம் தேதி வரை மொத்தம் 45 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆசிரியர்கள் மே 1ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை விடுமுறையில் இருப்பார்கள் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் விடுமுறை தொடர்பான மேலும் அதிக விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Trending News

Latest News

You May Like